October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

மாகாண மட்ட ஆங்கில மொழிப் பேச்சுப் போட்டியில்  கார்மேல் பற்றிமா மாணவி ரகுராமன் யுபாஷனா முதலாமிடம்!

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட ஆங்கில மொழி போட்டிகள் – 2026 இதில் ஆங்கில பேச்சுப் போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. ​இப்போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையைச் சேர்ந்த தரம் 7இல் கல்விபயிலும் மாணவி ரகுராமன் (பொறியியலாளர் ) கோகுலவாணி (சட்டத்தரணி )  தம்பதிகளின் புதல்வி யுபாஷனா பேச்சுப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் பிராந்தியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவியின் சாதனைக்காக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை நிருவாகத்தினர் அவரை ஊக்கப்படுத்தியதோடு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இப் போட்டிகள்  காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த மதனகுமார் சோமிலாவுக்கு நடனத்துறையில் முதல் தர சிறப்பு நுண்கலைமாணி பட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த மதனகுமார் சோமிலா நடனத்துறையில் முதல் தரத்தில் (First Class) சிறப்பு நுண்கலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். நடனத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்று முதல் தரப் பட்டத்தைப் பெற்றுள்ள இவருக்குப் எமது வாழ்த்துக்கள்

Read More

அனோஜன் விவகாரம் – சவூதி அரேபியா சென்ற சட்டத்தரணிகள் குழு -இன்று நாடு திரும்புவதில் தாமதம்

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாமதம்! சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் தண்டனைக்கு எதிராக, ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 11) சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டத்தரணிகள் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த மேன்முறையீடு தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாடின் ஒருங்கிணைப்புடன், இரு நாடுகளையும் சேர்ந்த சட்டத்தரணிகள் […]

Read More

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழாவும், தீ மிதிப்பும் – 2026

( அ . யனுஷ்பிரஜன் ) அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனின் வருடாந்த அலங்கார சக்திப் பெருவிழா ( 2026.10.11 ) ம் திகதி இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமைத் திதியும், சித்திரை நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப வேளையில் காலை 06.30 மணியளவில் அம்மனின் அழகிய திருக்கதவு திறக்கும் சுப வைபவம் அன்னையின் அருளாசியுடன் இடம்பெற்றது தொடர்ந்து 09 நாட்கள் விழா இடம்பெற்று பத்தாம் நாள் தீமிதிப்பு நிகழ்வுடன் நிறைவுபெறும். 2026.10.13 செவ்வாய்க்கிழமை பாற்குடபவனி மற்றும் […]

Read More

சவூதி விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி; 309 பேர் காயம்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன்இ 309 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது சர்வதேச ஊடகங்கள் தெரிவித்த தகவல் உயிரிழந்தவர்களில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த நால்வரும், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரும், அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குகின்றனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள செளதி தலைமையிலான ராணுவக் […]

Read More

மாகாண மட்ட ஆங்கில மொழிப் போட்டியில் கதை கூறுதலில் கார்மேல் பற்றிமா மாணவன் கு.டிதுர்சன் முதலாமிடம்

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட ஆங்கில மொழி போட்டிகள் – 2026 இதில் ஆங்கில படைப்பாற்றல் போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. ​இப்போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையைச் சேர்ந்த தரம் 10 ல் கல்விபயிலும் மாணவன் குமாரதீபன் ருத்ராம்பாள் தம்பதிகளின் புதல்வன் கு.டிதுர்சன் கதை கூறுதுதல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் பிராந்தியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ​ ​மாணவனின் இந்த சாதனைக்காக பாடசாலை அதிபர், […]

Read More

கல்முனை றோட்டரிக் கழகத்தின் உலக சிறுவர் தின விழா.

( வி.ரி. சகாதேவராஜா)   உலக சிறுவர் தினத்தினையொட்டி கல்முனை றோட்டரிக்கழகம், பொத்துவில்  இன்ஸ்பெக்டர் ஏத்தம் அதக பாடசாலை  மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வினை  மையமாக கொண்டு சிறுவர்தின விழாவினை நடாத்தியுள்ளது. இவ்விழா றோட்டரிக் கழகத் தலைவர் இரா. திருநாவுக்கரசு  தலைமை யில் நடைபெற்றதுடன், செயலாளர் மு.சிவபாதசுந்தரம் மற்றும் பொறியியலாளர் Rtn என். றதீசன், Rtn எஸ். சசிதரன், Rtn கே. ரவிசந்திரன் ஆகியோருடன் அதிபர் கே.ராமு, ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர் எஸ். நல்லதம்பி மற்றும் […]

Read More

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு ஆரம்பம்; 21ஆம் திகதி தீ மிதிப்பு வைபவம்.

(செல்வி வினாயகமூர்த்தி, ) அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா இன்று (11) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, ஆலயத்தில் பல்வேறு சமயக் கிரியைகள், விசேட அபிஷேக அலங்காரப் பூசைகள், ஆராதனைகள் மற்றும் அம்மனின் வீதியுலா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை சித்த யோகமும் சித்திரை நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் கணபதி ஹோமத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. அன்றிரவு 7.21 மணிக்கு அம்மனின் […]

Read More

சாய்ந்தமருதில் களைகட்டிய ‘கிழக்கின் கலைச்சங்கமம்’ மாபெரும் ஐந்து நாள் பெருவிழா

(வி.ரி. சகாதேவராஜா,) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கல்முனை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த ‘கிழக்கின் கலைச்சங்கமம் – Eastern Art Fusion’ கலை விழா  சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் ஐந்து நாட்களாக நடைபெற்று நிறைவுக்கு  வந்துள்ளது. முன்னொருபோதும் நடைபெறாத அளவில் ஐந்து நாட்கள் கொண்ட பல்வேறு கலை வடிவங்களை உள்ளடக்கியதான இந்த மாபெரும் கலைச்சங்கமம் எனும் பெருவிழா நடைபெற்றது.  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்  பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமாரின் […]

Read More

சமயம், சமூகம், ஆன்மீகம் மற்றும் இன நல்லுறவு பணிகளில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டவர் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மெளலானா – அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த அனுதாபம்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சமயம், சமூகம், ஆன்மீகம் மற்றும் இன நல்லுறவு சார்ந்த பணிகளில் மிகவும் கரிசனையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட அஷ்ஷெய்க் எப்.எம். அஹமதுல் அன்ஸார் மெளலானா (நளீமி, எம்.ஏ) அவர்களின் திடீர் மறைவு சமூகத்திற்கும் பிராந்தியத்திற்கும் நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை உருக்கமான கவலையை வெளியிட்டுள்ளது. அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம், செயலாளர் ஏ.எல். நாஸிர் கனி ஆகியோர் இணைந்து விடுத்துள்ள […]

Read More