October 12, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > மாகாண மட்ட ஆங்கில மொழிப் போட்டியில் கதை கூறுதலில் கார்மேல் பற்றிமா மாணவன் கு.டிதுர்சன் முதலாமிடம்

மாகாண மட்ட ஆங்கில மொழிப் போட்டியில் கதை கூறுதலில் கார்மேல் பற்றிமா மாணவன் கு.டிதுர்சன் முதலாமிடம்

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட ஆங்கில மொழி போட்டிகள் – 2026

இதில் ஆங்கில படைப்பாற்றல் போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

​இப்போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையைச் சேர்ந்த தரம் 10 ல் கல்விபயிலும் மாணவன் குமாரதீபன் ருத்ராம்பாள் தம்பதிகளின் புதல்வன் கு.டிதுர்சன் கதை கூறுதுதல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் பிராந்தியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

​

​மாணவனின் இந்த சாதனைக்காக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை நிருவாகத்தினர் அவரை ஊக்கப்படுத்தியதோடு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இப் போட்டிகள் நேற்று காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *