October 12, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் புதிய தலைவராக இரத்தினம் ஜெகநாதன் தெரிவு

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் புதிய தலைவராக இரத்தினம் ஜெகநாதன் தெரிவு

(செல்வி வினாயகமூர்த்தி )

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் சனிக்கிழமை (10) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றப் பணிமனையில், மன்றத்தின் தலைவர் பி. தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பழைய நிர்வாக சபை உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.

இதன்போது, மன்றத்தின் புதிய தலைவராக இரத்தினம் ஜெகநாதன் தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக நல்லதம்பி சுதாகரனும், பொருளாளராக ஆரியதாச தர்மதாசவும் தெரிவு செய்யப்பட்டனர்.

உப தலைவராக வி. இராசலிங்கமும், பிரதித் தலைவராக வி. குணாளனும், உப செயலாளராக எஸ். புண்ணியமூர்த்தியும், இணைப்பாளராக பி. நடராஜாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், மன்றத்தின் ஆலோசகர்களாக முன்னாள் தலைவர்களான எஸ்.சந்திரசேகரம் மற்றும் பி.தணிகாசலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், மன்றத்தின் விசேட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட உப குழுக்களுக்கான அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

நிகழ்வின் இறுதியில் புதிய நிர்வாக சபையினரின் ஏற்புரையும், சபையோரின் ஆலோசனைகளும் இடம்பெற்றதுடன், மன்றத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து நன்றியுரையுடன் வருடாந்தப் பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *