கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட ஆங்கில மொழி போட்டிகள் – 2026
இதில் ஆங்கில பேச்சுப் போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
இப்போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையைச் சேர்ந்த தரம் 7இல் கல்விபயிலும் மாணவி
ரகுராமன் (பொறியியலாளர் ) கோகுலவாணி (சட்டத்தரணி ) தம்பதிகளின் புதல்வி யுபாஷனா பேச்சுப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் பிராந்தியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த மாணவியின் சாதனைக்காக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை நிருவாகத்தினர் அவரை ஊக்கப்படுத்தியதோடு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இப் போட்டிகள் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.