October 12, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > சவூதி விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி; 309 பேர் காயம்

சவூதி விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி; 309 பேர் காயம்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன்இ 309 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது

சர்வதேச ஊடகங்கள் தெரிவித்த தகவல்

உயிரிழந்தவர்களில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த நால்வரும், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரும், அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குகின்றனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள செளதி தலைமையிலான ராணுவக் கூட்டணிஇ பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன்இ ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *