October 12, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழாவும், தீ மிதிப்பும் – 2026

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழாவும், தீ மிதிப்பும் – 2026

( அ . யனுஷ்பிரஜன் )

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனின் வருடாந்த அலங்கார சக்திப் பெருவிழா ( 2026.10.11 ) ம் திகதி இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமைத் திதியும், சித்திரை நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப வேளையில் காலை 06.30 மணியளவில் அம்மனின் அழகிய திருக்கதவு திறக்கும் சுப வைபவம் அன்னையின் அருளாசியுடன் இடம்பெற்றது தொடர்ந்து 09 நாட்கள் விழா இடம்பெற்று பத்தாம் நாள் தீமிதிப்பு நிகழ்வுடன் நிறைவுபெறும்.

2026.10.13 செவ்வாய்க்கிழமை பாற்குடபவனி மற்றும் வீரகம்பம் வெட்டுதல் நிகழ்வுகள் இடம்பெறும்
காலை 9.00 மணிக்கு கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குட பவனியும் மாலை 3.00 மணியளவில் வீர கம்பம் வெட்டும் நிகழ்வும் மாலை 5.30 மணியளவில் வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து வீரகம்பம் எடுத்து வருதலும் இடம்பெறும்.

2026.10.16 ம் திகதி வெள்ளிக்கிழமை உள்வீதி சுவாமி உலா வருதல் இடம்பெறும்

2026.10.17ம் திகதி சனிக்கிழமை சுவாமி உள்வீதி உலா வந்து பூசைகள் நடைபெற்று சுவாமி வெளிவீதி உலா நடைபெறும்

2026.10.18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூசைகள் நடைபெற்று சுவாமி வெளிவீதி உலா நடைபெறும்

2026.10 19 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு நோர்ப்பு நெல் நேர்தலும், பி.ப. 12.00 மணிக்கு சக்தி பூசையும், மாலை 4.00 மணிக்கு நோர்ப்பு கட்டுதலும், இரவு 7.00 மணிக்கு தீ மூட்டும் வைபவமும் இடம்பெறும்.

2026.10:20 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு விஷேட கிரியைகள் இடம்பெற்று 6.00 மணிக்கு அம்மனின் பக்தி ததும்பும் தீ மிதிப்பு வைபவமும் அருள் வாழி பூசைகளும் இடம்பெறும்

2026.10.26 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு எட்டாம் சடங்கு நிகழ்வு ஆரம்பமாகி இரவு பொங்கல் நிகழ்வுகளுடன் விஷேட ஆராதனைகள் இடம்பெற்று. மறுநாள் 2026.10.27ம் திகதி செவ்வாய்க்கிழமை எட்டாம் சடங்கு இடம்பெறும் காலை 7.00 மணிக்கு தீக்குழிக்கு பால் வார்க்கும் வைபவத்துடன் அம்மனின் இவ்வாண்டுக்கான உற்சவம் யாவும் பூரண நிறைவு பெறும்.

ஆலய முதல்வர் சிவத்திரு க. சிவராசா ஐயாவின் விண்ணுலக ஆசியுடனும் , திருச்சடங்கு பூசைகள் யாவும் உற்சவகால பிரதம குரு உற்சாடன பானு சிவத்திரு இ. யோகானந்தம் ஐயா [ரவி ஐயா] தலைமையில், ஆலய குரு வீரமாகாளியின் மைந்தன் சிவத்திரு ஜெ. ஜெயரூபன் ஐயா அவர்களினாலும் , சக்தி பிரியன் சிவத்திரு யோ . கஜேந்திரன் ஐயா அவர்களினாலும் , சக்தியின் மைந்தன் சிவத்திரு யோ. மோகனராஜ் ஐயா அவர்களினாலும், சக்தி தாசன் சிவத்திரு வி . நிஷாந் ஐயா அவர்களினாலும், சிவத்திரு ப . பவிக்குமார் ஐயா அவர்களினாலும் , இவ்வாண்டுக்கான அன்னையின் சக்தி விழா நிறைவேற்றப்படும்.

அனைவரும் வருக அம்மன் அருள் பெருக.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *