( வி.ரி.சகாதேவராஜா)
தீபாவளி சிறப்பை கொண்டாடுமுகமாக, கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் வில்லுப்பாட்டு ஒன்றை நடத்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது.
குறித்த கலந்துரையாடல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமையகத்தில், வலையமைப்பின் ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நேற்று (24) சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஒருங்கிணைப்பு மைய செயலாளர் கா. சாந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்த, திட்ட இணைப்பாளர் பி.சந்திரமோகன் திட்டம் பற்றி விளக்கினார் .
தொடர்ந்து பிரபல எழுத்தாளர்களான கலாபூஷணம் அக்கரைப் பாக்கியன், கலாபூஷணம் டேவிட் ஆகியோர் வில்லுப்பாட்டு தொடர்பாக விளக்கமளித்தனர்.
எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மைய உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதன்படி, எதிர்வரும் 04 ஆம் திகதி காலை பெரிய நீலா வணையில் ஒளிப்பதிவு செய்வதற்கு ஸ்தாபகர் பு.கேதீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை, ஜனவரி பிற் பகுதியில் இலக்கிய ஆர்வலர்களுக்கு இரண்டாம் கட்டப்பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.






