October 25, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மருதமுனையில் தேசிய சமூக வலுவூட்டல் விழிப்புணர்வு நிகழ்வு

மருதமுனையில் தேசிய சமூக வலுவூட்டல் விழிப்புணர்வு நிகழ்வு

பாறுக் ஷிஹான்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம்’ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, மருதமுனை 1 மற்றும் 2 ஆம் பிரிவுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்காக அண்மையில் (22) மருதமுனை சமுர்த்தி வங்கியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ. அன்வர் கலந்துகொண்டு, தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் அதனால் பொதுமக்கள் அடையும் நன்மைகள் குறித்தும் விரிவான விழிப்பூட்டல் உரையினை ஆற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் சமுர்த்தித் திட்ட முகாமையாளர் எஸ்.எல். அஸீஸ், மருதமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.எஸ். பரீரா மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்படப் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *