October 25, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழா: T Shirt-சேர்ட் அறிமுகம்

சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழா: T Shirt-சேர்ட் அறிமுகம்

தில்சாத் பர்வீஸ்

சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு, வைர விழாவுக்கான T Shirt அறிமுக நிகழ்வு நேற்று (24) சனிக்கிழமை பாடசாலை அதிபர் யு.எல்.எம். இஸ்மாயில் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

1966ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையான ஆறு தசாப்தகாலக் கல்விப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், “60 வருட கால சிறப்புமிக்க கல்விச் சேவை” என்ற மகுட வாசகத்துடன் பாடசாலையின் வைர விழாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பாடசாலையின் பெருமைமிக்க வரலாற்றையும், ஆறு தசாப்தகாலக் கல்விச் சேவையையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், வைர விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

அத்துடன், பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நட்புறவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதுடன், பாடசாலைக் கால நினைவுகளை மீட்டெடுக்கும் நோக்கிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், சம்மாந்துறை போக்குவரத்து பொறுப்பதிகாரி ஜீ.ஏ. சேனாரத்ன, பாடசாலை பிரதி அதிபர் அஸீமுதீன் அஷ்ரஃப், உதவி அதிபர் ஏ.பி. முஹம்மட், டி சேட் அறிமுக விழாவின் இணைப்பாளர் யு.எல். றைஸ் அஹமட் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *