October 25, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்குபேரின்பராசா ரேகாசலன் தெரிவு.

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்குபேரின்பராசா ரேகாசலன் தெரிவு.

பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள எருவில் கண்ணகி மகாவித்தியாலய அதிபராகப் பணியாற்றும் பேரின்பராசா ரேகாசலன் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட திறந்த(OPEN) போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை என்பவற்றில் சித்தியடைந்து, இச் சேவைக்குத் தெரிவாகியுள்ளார்.

 துறைநீலாவணைக் கிராமத்தின் மூத்த ஊடகவியலாளரும், ஓய்வுநிலை அதிபருமான பேரின்பராசா மற்றும் குமுதினி தம்பதியினரின் மூத்த புதல்வராவார்.

துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் பாடசாலைப் பருவத்திலேயே தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயத்திற்குப் பெருமை சேர்த்தவர் .

 உயர் கல்வியிலும் சிறந்து விளங்கும் இவர், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை சிறப்பு  பட்டதாரியாகவும், இதே பல்கலைக் கழகத்தின் கல்வியியல் முதுமாணிப் ( M.Ed ) பட்டதாரியும் உள்ளதுடன்,  இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் பட்டப் பின் கல்வி டிப்ளோமாவையும் பூர்த்தி செய்துள்ளார்.

​இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரிட்சையில் சித்தியடைந்து இச் சேவைக்கு தெரிவாகி களுதாவளை தேசிய பாடசாலையில் பிரதி அதிபராகவும், பின்னர் இப் பாடசாலையின்  பொறுப்பு அதிபராகவும் கடமையாற்றி தற்போது எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வரும் நிலையில் தனது விடாமுயற்சியின் காரணமாக இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு தெரிவாகியுள்ளார். மேலும் இவர்  அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *