October 9, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > எருவிலில் வரும் சனிக்கிழமை (10) மாபெரும் இரத்ததான முகாம்!

எருவிலில் வரும் சனிக்கிழமை (10) மாபெரும் இரத்ததான முகாம்!

எருவிலில் அமரர் சமூகஜோதி மு. இளங்குமார் அவர்களின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!

எருவில் Y.U.K குடும்பத்தின் ஏற்பாட்டில், வர்த்தகரும் முன்னாள் தலைவருமான அமரர் சமூகஜோதி மு. இளங்குமார் அவர்களின் 50-வது ஜனன தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெறும் இந்நிகழ்வு தொடர்பான விபரங்கள்:

  • திகதி: 2024.10.10, சனிக்கிழமை
  • நேரம்: காலை 8:00 மணி முதல்
  • இடம்: பொது நூலகம், எருவில்

இவ் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கும் அனைவருக்கும் பிரத்யேக T-Shirt மற்றும் பெறுமதிமிக்க சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

  • திரு தி. ஜெகன் – 0754143787
  • திரு இ. குஜாந்த் – 0756298460

அனைத்து பொதுமக்களையும் இந்த உன்னத சமூகப் பணியில் கலந்துகொண்டு உயிர் காக்க முன்வருமாறு அன்போடு அழைக்கப்படுகின்றீர்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *