November 21, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > வைத்திய அத்தியட்சகர் பிரதீபா பார்த்திபனின் 22 வருட அரச சேவையை பாராட்டி கல்முனையில் கௌரவிப்பு!

வைத்திய அத்தியட்சகர் பிரதீபா பார்த்திபனின் 22 வருட அரச சேவையை பாராட்டி கல்முனையில் கௌரவிப்பு!

பைஷல் இஸ்மாயில்

இலங்கையின் ஆயுர்வேத மருத்துவத்துறையில் 22 வருடங்கள் அரச சேவையில் அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் பணியாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி பிரதீபா பார்த்திபனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, (18) கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்திய சூரி வைத்திய கலாநிதி எம்.சி.எம்.காலித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள பிரதி மாகாண ஆணையாளர் வைத்தியர் அன்டன் அனஸ்டீன், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.வை.இஸ்ஹாக், சிரேஷ்ட வைத்தியர் யூ.எல்.எம்.கியாஸ் உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, 22 வருடகால அரச சேவையில் பணியாற்றி ஓய்வு நிலைக்குச் செல்லும் வைத்திய அத்தியட்சகர் திருமதி பிரதீபா பார்த்திபனின் சேவைகள் நினைவுகூரப்பட்டு பாராட்டப்பட்டதுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை, காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரியாகப் பதவியுயர்வு பெற்று இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்தியர் திருமதி எம்.எப்.பாத்திமா சிபாறாவும் இந்நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டு, நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *