November 21, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கில் ‘வீடு வீடாகத் திறன் பிரச்சாரம்’ வெற்றிகரமாக முன்னெடுப்பு!

கல்முனை வடக்கில் ‘வீடு வீடாகத் திறன் பிரச்சாரம்’ வெற்றிகரமாக முன்னெடுப்பு!

சௌவியதாசன்


​கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில், தேசிய திறன் முன்னேடுப்புத் திட்டத்தின் கீழ் “வீடு வீடாகத் திறன் பிரச்சாரம்” (Door to Door Skill Campaign) இன்றைய தினம் (2026 நவம்பர் 21) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், “நீங்கள் உருவாகும் இடமே, நாடு உருவாகும் இடம்” மற்றும் “திறன் வளர்த்தால் – வாழ்க்கை உயரும்; நாடு செழிக்கும்!” என்ற தொனிப்பொருட்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


​இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, திறன்களை அடையாளம் கண்டு வளர்த்தல், உள்ளூர் மற்றும் தேசிய தொழில் வாய்ப்புகளுடன் இணைத்தல், சுயதொழில் மற்றும் தொழில் முயற்சிகளைத் தொடங்குதல் மற்றும் மேம்படுத்துதல், அத்துடன் டிஜிட்டல் திறன் மூலம் எதிர்காலத்திற்கான வழிகாட்டல்களை வழங்குதல் ஆகிய நான்கு துறைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.


​திறன் வளர்ச்சி என்பது தனிநபரின் முன்னேற்றம் மட்டுமன்றி, முழுக் குடும்பத்தின் வளர்ச்சியையும் சயசார்பு நிறைந்த சமூகத்தின் உருவாக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
​இந்நிகழ்வில்
​M. Jeevaraj – நிர்வாக உத்தியோகத்தர்
​A. Amalathasan – கிராம நிர்வாக உத்தியோகத்தர்
​V. Aravinthan – திட்டமிடல் பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்
​T. Sivanesan – திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட
​பிரஜா சக்தி குழு தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

https://www.facebook.com/share/p/1QyUmVWvnW புகைப்பட்ங்களை பார்வையிட இந்த இணைப்பை சொடுக்கவும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *