November 21, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

நாடளாவிய ரீதியில் நாளை ஆரம்பமாகும் ‘வீடு வீடாகத் திறன் பிரச்சாரம்’ – கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலும் இன்று முன்னெடுப்பு!

சௌவியதாசன் ​கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ‘தேசிய திறன் முன்னேடுப்பு’ (National Skills Drive) திட்டத்தின் கீழ், “வீடு வீடாகத் திறன் பிரச்சாரம்” (Door to Door Skill Campaign) நாளை நவம்பர் 21, 2026 அன்று நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில், பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களிலும் நாளைய தினம் இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. ​”நீங்கள் உருவாகும் இடமே, […]

Read More

மட்டக்களப்பு ,கல்முனை, ஏறாவூர் பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று பெண்களை காணவில்லை – பொலிஸார் தீவிர விசாரணை

மட்டக்களப்பு ,கல்முனை, ஏறாவூர் பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளனர். இது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பல கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டக்களப்பு கல்லடியில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற யுவதி கடந்த மாதம் வீடு திரும்பவில்லை அவர் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை , சில திகங்களுக்கு முன்னர் கல்முனையைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது . இன்று […]

Read More

உலகளாவிய இகிமி  சுவாமி சுஹிதானந்தா ஜீ கதிர்காமம் விஜயம்; 50 ஆண்டுகளுக்கு முன் சுவீகரிக்கப்பட்ட இகிமி.மடத்தையும் பார்வையிட்டார்

( வி.ரி.சகாதேவராஜா)  உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் தலைமையிலான குழுவினர் (19) வியாழக்கிழமை கதிர்காமம் மற்றும் செல்லக் கதிர்காமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தனர்.  மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் ஏற்பாட்டில் இக் குழுவினர் விஜயத்தை மேற்கொண்டனர். உலகளாவிய   சுவாமி சுஹாதானந்தா ஜீ இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசினால் சுவீகரிக்கப்பட்ட கதிர்காமம் இகிமி.மடத்தையும் பார்வையிட்டார். குறித்த […]

Read More

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் திறன் அபிவிருத்தி பயிற்சி நெறி.

(றாசிக் நபாயிஸ்,மருதமுனை செய்தியாளர்) பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார விவகார அமைச்சின கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடாக பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான (17,18,19) மூன்று நாள் திறன் அபிவிருத்தி பயிற்சி நெறி மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியானது கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக சுகாதார அமைச்சின் நிதி அனுசரணையில் இடம்பெற்றது. இப்பயிற்சியின் பிரதான வளவாளராகதேசிய அபாயகர ஒளடதங்கள் […]

Read More

அரச காணி ஆக்கிரமிப்பு விவகாரம்: அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது!

(செல்வி வினாயகமூர்த்தி ) அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட அரசடி பகுதியில், தனிநபர் ஒருவரினால் அத்துமீறி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரச காணியிலிருந்து அவரை வெளியேற்றுவதற்காக கடந்த 10 ம்திகதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட வெளியேற்றல் கட்டளையை நடைமுறைப்படுத்தச் சென்ற அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குறித்த நபர் இன்று (19) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வெளியேற்றல் கட்டளையை நடைமுறைப்படுத்தச் சென்ற கிராம உத்தியோகத்தர், பிரதேச சபை உறுப்பினர் மற்றும் வருமான உத்தியோகத்தர் […]

Read More

கல்முனை வடக்கில் பிரதேச நல்லிணக்க வலையமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்.

(றாசிக் நபாயிஸ்) வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தும் “பல்லின சமூகங்களுக்கிடையே சமூக சகவாழ்வினை மேம்படுத்தல்” செயற்றிட்டத்தின் கீழ், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச மட்ட நல்லிணக்க வலையமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் கூட்டம் (19) நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திரு. எம். அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஜனாப். ஏ.சி.ஏ. அஸீஸ் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு, நல்லிணக்க வலையமைப்பின் அவசியம், சமூக முரண்பாடுகளை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளித்தார். வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தவிசாளர் ஜனாபா எம். றிலீபா பேகம் மற்றும் திட்ட இணைப்பாளர் ஜனாப். எம்.ஐ. றியாழ் ஆகியோரும் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்தனர். இக்கலந்துரையாடலில் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு எம். ஜீவராஜ் அவர்களும் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஜனாப் எம். எஸ். ஜலீல் அவர்களும் கலந்து கொண்டு  அறிவுரையை வழங்கினார்.  இக் ககலந்துரையாடலுக்கு சகவாழ்வுச் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், பிரஜாசக்தி குழுத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, கல்முனை வடக்கு பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்காக அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பிரதேச மட்ட நல்லிணக்க வலையமைப்பை உருவாக்கி, ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்தனர்.

Read More

சமத்துவமும் சோசலிசமும் கனவு கண்ட தோழர் – க. பத்மநாபா- “சாதியால் மனிதன் ஒடுக்கப்படுவதை ஏற்காத மனிதர்” – சிறப்புக் கட்டுரை

வி.ரி. சகாதேவராஜா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியி(EPRLF) செயலாளர் நாயகம் அமரர் தோழர் க. பத்மநாபாவின் 75வது அகவை தினம் இன்று (19-11-2026) வியாழக்கிழமை ஆகும். 1951 நவம்பர் 19இல் யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கந்தசாமி பத்மநாபா. தோழர்களால் ‘நாபா’, ‘ரஞ்சன்’ என அன்போடு அழைக்கப்பட்டவர். 1960களில் யாழ்ப்பாணத்தில் வெடித்த சாதி ஒழிப்புப் போராட்டமே அவரை முதலில் பாதித்தது. வேளாளர் குடும்பத்தில் பிறந்தும், சாதியால் மனிதன் ஒடுக்கப்படுவதை அவரால் ஏற்க முடியவில்லை. பின்னர் […]

Read More

நாளை (19) அமரர் தோழர் க. பத்மநாபாவின் 75வது அகவை தினம்; மல்வத்தையில் பிரதான நிகழ்வு

(வி.ரி.சகாதேவராஜா) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(EPRLF) செயலாளர் நாயகம் அமரர் தோழர் க. பத்மநாபாவின் 75வது அகவை தினம் நாளை (19-11-2026) வியாழக்கிழமை ஆகும் . அதனை  முன்னிட்டு, அம்பாறை மாவட்ட மல்வத்தையில் விசேட பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. தோழர் பத்மநாபா சமூகசேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில், விசேட பூஜை வழிபாடுகளும், முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு மல்வத்தை, சடயந்தலாவ வீதியில் அமைந்துள்ள பாரதியார் பாலர் பாடசாலையில் நாளை […]

Read More

இன்று நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் – என்பிபி உறுப்பினர் மாத்திரம் நடுநிலை!!

​(வி.ரி. சகாதேவராஜா) ​அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்டம், 12 உறுப்பினர்களின் ஆதரவுடன்  இன்று (18) புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. என்பிபி உறுப்பினர் எஸ். நிரோஜன் மாத்திரம் நடுநிலை வகித்தார்.ஏனையோர் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். ​நாவிதன்வெளி பிரதேச சபையின் 17ஆவது கூட்டத்தொடரும், 2027ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்ட அமர்வும் தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.  சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, கார்த்திகை மாதத்தில் உயிர் […]

Read More

கல்முனை மற்றும் சாய்ந்தமருதுக்கு விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்?

-கிஷோ- கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை அமைக்கப்பட வேண்டும் என அப்பிரதேச மக்களால் தொடரப்பட்ட வழக்கு நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பில் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபையை அமைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், எல்லை நிர்ணயப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, […]

Read More