November 21, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கில் பிரதேச நல்லிணக்க வலையமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்.

கல்முனை வடக்கில் பிரதேச நல்லிணக்க வலையமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்.

(றாசிக் நபாயிஸ்)

வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் (ONUR) ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தும் “பல்லின சமூகங்களுக்கிடையே சமூக சகவாழ்வினை மேம்படுத்தல்” செயற்றிட்டத்தின் கீழ், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச மட்ட நல்லிணக்க வலையமைப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் கூட்டம் (19) நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திரு. எம். அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஜனாப். ஏ.சி.ஏ. அஸீஸ் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு, நல்லிணக்க வலையமைப்பின் அவசியம், சமூக முரண்பாடுகளை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தவிசாளர் ஜனாபா எம். றிலீபா பேகம் மற்றும் திட்ட இணைப்பாளர் ஜனாப். எம்.ஐ. றியாழ் ஆகியோரும் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.

இக்கலந்துரையாடலில் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு எம். ஜீவராஜ் அவர்களும் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஜனாப் எம். எஸ். ஜலீல் அவர்களும் கலந்து கொண்டு  அறிவுரையை வழங்கினார்.

 இக் ககலந்துரையாடலுக்கு சகவாழ்வுச் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், பிரஜாசக்தி குழுத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, கல்முனை வடக்கு பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்காக அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பிரதேச மட்ட நல்லிணக்க வலையமைப்பை உருவாக்கி, ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *