November 21, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அரச காணி ஆக்கிரமிப்பு விவகாரம்: அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது!

அரச காணி ஆக்கிரமிப்பு விவகாரம்: அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது!

(செல்வி வினாயகமூர்த்தி )

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட அரசடி பகுதியில், தனிநபர் ஒருவரினால் அத்துமீறி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரச காணியிலிருந்து அவரை வெளியேற்றுவதற்காக கடந்த 10 ம்திகதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட வெளியேற்றல் கட்டளையை நடைமுறைப்படுத்தச் சென்ற அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குறித்த நபர் இன்று (19) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளியேற்றல் கட்டளையை நடைமுறைப்படுத்தச் சென்ற கிராம உத்தியோகத்தர், பிரதேச சபை உறுப்பினர் மற்றும் வருமான உத்தியோகத்தர் ஆகியோரைத் தமது கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததுடன், அவர்களை உள்ளே வைத்து நுழைவாயில் கதவைப் பூட்டி, வெளியேற முடியாதவாறு தடுத்து இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *