November 21, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் திறன் அபிவிருத்தி பயிற்சி நெறி.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் திறன் அபிவிருத்தி பயிற்சி நெறி.

(றாசிக் நபாயிஸ்,
மருதமுனை செய்தியாளர்)

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார விவகார அமைச்சின கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடாக பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான (17,18,19) மூன்று நாள் திறன் அபிவிருத்தி பயிற்சி நெறி மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறியானது கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக சுகாதார அமைச்சின் நிதி அனுசரணையில் இடம்பெற்றது.

இப்பயிற்சியின் பிரதான வளவாளராக
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வட கிழக்கு மாகாண இணைப்பாளரும் ‘ரட்டம எகட்ட’ தேசிய அணியின் உயர்பீட உறுப்பினருமான பஷீர் முஹம்மத் றஷாட் கலந்துகொண்டு பயிற்சி நெறியை வழங்கி வைத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *