சர்மிலன்
நாவிதன்வெளி (VC) கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் சித்ரா தம்பதியினரின் புதல்வியாகிய திருமதி தர்ஷினி தினேஷ் காந்த் அவர்கள், இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, (SLTES – OPEN) தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக நியமனம் பெற்றுள்ளார்.
தற்போது நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், அதே பாடசாலையின் பழைய மாணவரும் ஆவார். தாம் கல்வி கற்ற பாடசாலையிலேயே ஆசிரியராகப் பணியாற்றி, இன்று கல்வித்துறையில் மேலும் உயரிய பொறுப்பினை நோக்கிப் பயணிக்கிறார்