October 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஆசிரியை செல்வி.கோ.மாலதி ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு தெரிவு.

ஆசிரியை செல்வி.கோ.மாலதி ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு தெரிவு.

கே.எஸ்.கிலசன்

நாவிதன்வெளி பிரதேசத்திலிருந்து ஆசிரியை செல்வி.கோபாலப்பிள்ளை மாலதி அவர்கள் இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கான (SLTES) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளராக தெரிவாகியுள்ளார்.

சது/நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் தனது உயர்கல்வி வரை கலைப்பிரிவில் கற்று கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையில் தனது நுண்கலைமாணி பட்டத்தை பெற்றுக்கொண்டவர்.

கற்பித்தல் பணியில் 2017 இல் இணைந்து கொண்டவர் கடந்த 9 வருடங்களாக கமு/சது/ஹோலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

அண்மையில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்ததன் மூலம் தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *