October 24, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > இலங்கை ஆசிரியர் கல்வியிலாளர் சேவைக்கு கு. சசிகுமார் அவர்கள் தெரிவு!

இலங்கை ஆசிரியர் கல்வியிலாளர் சேவைக்கு கு. சசிகுமார் அவர்கள் தெரிவு!

இலங்கை ஆசிரியர் கல்வியிலாளர் சேவைக்கு கு. சசிகுமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் பெரிய நிலாவணையைச் சேர்ந்தஇவர் தனது ஆரம்பக் கல்வியை கமு/ கமு விஷ்ணு மகா வித்தியாலயத்தில் ஆரம்பம் முதல் உயர்தரம்வரை கல்வி கற்றதோடு முதல் தரத்திலே பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நூன்கலைத் துறையில் சிறப்பு பட்டம் பெற்றதோடு பல்கலைக்கழகத்தில் முதலாம் தரத்திலும் சித்தி அடைந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக தொடர்ச்சியாக 8 வருடங்கள் கடமையாற்றி தற்பொழுது இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவையில் திறந்த போட்டி பரீட்சையில் சித்தி அடைந்ததோடு மட்டுமல்லாமல் நேர்முகப் பரீட்சையிலும் சித்தி அடைந்து எதிர் வருகின்ற ஒன்பதாம் திகதி இலங்கை கல்வியலாளர் சேவைக்குள் உள்வாங்கப்பட இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *