( ஜலீல் ஜீ + தில்சாத் பர்வீஸ்)
சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இன்று (24) சனிக்கிழமை நடைபெற்ற பொதுச்சபைத் தேர்தலில், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவராக மீராலெவ்வை அப்துல் மஜீட் (சத்தார்) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில் 225 பேர் வாக்களித்தனர்.
இதன்போது, உப தலைவராக முகம்மது இஸ்மாயில் முகம்மது கலீல், செயலாளராக முகம்மது இஸ்மாயில் முகம்மது இஸ்ஹாக், உப செயலாளராக அகமதுலெவ்வை றஸ்மின், பொருளாளராக முகம்மது முஸ்தபா நௌசாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களாக முகம்மது யாசீன் அஹ்மத் ஜலீல், ஆதம்லெவ்வை முகம்மது சாஜித் அலி, மீராலெவ்வை அப்துல் றஹீம், சுலைமாலெவ்வை முஹம்மது றுவைஸ்தீன், கோஸ் முகம்மது முகைதீன்பாவா, அஹமட் முஹம்மட் நுஸ்கி அஹமட், சீனி முகம்மது முகம்மட் முஸ்தபா, மீராசாஹிப் அப்துல் மஜீது, சின்னத்தம்பி அப்துல் சலாம் (எஸ்.டி. நிஸார்), அப்துல் ஹமீட் முஹம்மட் புஆத், அப்துல் அமீது ஜெமீல், முஹம்மது மக்கீன் பஹ்மி மக்கீன், பீர் முஹம்மட் மீரா முகைதீன் (றியாழ்), மீரா முகைதீன் முகம்மட் அலி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், குடிமரைக்கார் சார்பில் எஸ். மஃறுப் ஆதமும், ஜம்மியத்துல் உலமா சார்பில் மௌலவி அப்துல் றஹீமும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா, பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ. சுபைதீன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறாவின் அமீர் ஐ. அப்துல் ஜப்பார், தவிசாளர் டாக்டர் ஏ.எம்.எம்.ஏ. றஷீட், பொதுச் செயலாளர் ஏ. முஹம்மட் இல்யாஸ், செயலாளர் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னதாக, சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறாவின் ஏற்பாட்டில் எட்டு பள்ளிவாசல் வலயங்களுக்கான நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (23) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இன்றைய பொது தெரிவில், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் ஒருவரான சிரேஷ்ட சட்டத்தரணி சீனி முகம்மது முகம்மட் முஸ்தபா, தனது இராஜினாமாக் கடிதத்தைச் செயலாளரிடம் கையளித்துவிட்டு பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.


