October 24, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கு பிரதேச செயலக ஜப்பசி மாத பௌர்ணமி கலை விழா நாளை (25) சேனைக்குடியிருப்பில்

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஜப்பசி மாத பௌர்ணமி கலை விழா நாளை (25) சேனைக்குடியிருப்பில்

சௌவியதாசன்

​கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் , கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் “ஐப்பசி மாத பௌர்ணமி கலைவிழா” நாளை 2026.10.25 (ஞாயிற்றுக்கிழமை) சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலயத்தில் மாலை 5.30 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. தி.ஜே. அதிசயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.


​நிகழ்ச்சி நிரல்:
​விழாவின் தொடக்கமாக மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் மற்றும் கல்முனை சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலய மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து வரவேற்பு நடனம், பிரதேச செயலாளரின் வரவேற்பு உரை மற்றும் தலைமை உரை என்பன இடம்பெறும்.


​விழாவின் கலை நிகழ்வுகளாக:
​காவடி நடனம்: ஸ்ரீ நர்த்தனாலயா கலை மன்றம் (பாண்டிருப்பு)
​கிராமிய நடனம்: லாஷ்யா ருத்ராலயா நடனப்பள்ளி (சேனைக்குடியிருப்பு)
​குழு நடனம்: மகேஸ்வர மாதங்கி நாட்டியாலயம் (சேனைக்குடியிருப்பு)
​பல்வேறு பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
​நிகழ்வின் இறுதியாக கல்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் விழா நிறைவுபெறும். இந்நிகழ்ச்சித் தொகுப்பினை திரு. R. நிஜந்தன் மற்றும் திரு. V. கார்த்திக் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.

இக்கலைவிழாவில் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அமைப்பாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *