October 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி மாணவர்கள் சிங்கள மொழிப்போட்டியில் சாதனை ;தேசிய மட்டத்திற்கு தெரிவு

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி மாணவர்கள் சிங்கள மொழிப்போட்டியில் சாதனை ;தேசிய மட்டத்திற்கு தெரிவு

கிரிஷாந் மகாதேவன் –

2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி சிங்களப் போட்டி நிகழ்வுகளில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் பங்குபற்றி மகத்தான வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.

இப்போட்டிகளில் நாட்டார் பாடல் குழுப்போட்டியில் (Folk Song) இவ் பாடசாலை மாணவர்கள் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் இவ்வாறான மொழிப்போட்டி ஒன்றில் மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

நாட்டார் பாடல் குழுப்போட்டியில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்கள் விபரம்:
தரம் 06: M. கோவிஷாலி, Y. சயனு
தரம் 07: A. துலக்ஷனா, A. சாயிவிபாஸ்த்ரா
தரம் 08: G. விஸ்வாதிகா, M. கிதுர்சிகா
தரம் 09: S. ஜிவிஷ்ணா, R. ரிவிஷா

இதேவேளை, மாகாண மட்டத்தில் நடைபெற்ற ‘Sinhala Language Application and Comprehension’ எழுத்துப் பரீட்சைப் போட்டியில் கல்லூரி மாணவி V. தக்ஷாணினியா இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

மாகாண மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்த இம்மாணவர்களைக் கௌரவித்து பாராட்டும் நிகழ்வு நேற்று (22) பாடசாலை அதிபர் க. ஜயந்தன் அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *