கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சும் இலங்கை தகவல் தொழில்நுட்பத் துறை சம்மேளனமும் (FITIS) இணைந்து ஏற்பாடு செய்யும் 2026ஆம் ஆண்டுக்கான இளம் கணினி விஞ்ஞானி (Young Computer Scientist – YCS) போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.
மாகாண மட்ட போட்டியில் வெற்றி பெற்ற லோகசந்திரன் நிகர்ஷனா
தரம் 7 , காந்தராஜா இபெய்ஷா தரம் 8 , ஜெயகாந்தன் ஹரிச்சரன் தரம் 7 ஆகிய மாணவர்கள் கடந்த 22 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
இந்த மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் ஊக்கமளித்த பெற்றோருக்கும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பு பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் அடுத்த கட்ட சர்வதேச போட்டிகளிலும் பங்குகபற்ற எமது வாழ்த்துக்கள்