நாவிதன்வெளி விளாவடி பிள்ளையார் அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு!
சௌவியதாசன் நாவிதன்வெளி விளாவடி பிள்ளையார் அறநெறிப் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தேவையான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அறநெறிப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நேற்று (13) இந்தத் தளபாடங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனனின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. […]