November 17, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பதவியுயர்வு பெற்ற பணிப்பாளர் மருத்துவர் சுகுணனுக்கு கல்முனையில் மகத்தான பிரியாவிடை விழா

பதவியுயர்வு பெற்ற பணிப்பாளர் மருத்துவர் சுகுணனுக்கு கல்முனையில் மகத்தான பிரியாவிடை விழா

( வி.ரி. சகாதேவராஜா)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச்சென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணனுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (12) வியாழக்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

.முன்னதாக, வைத்தியசாலையின் சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை இடம்பெற்று நாதஸ்வரம், மேளதாளம் சகிதம் அவர் வரவேற்கப்பட்டார்.

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் பொன்னுச்சாமி சிறிசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிரேஸ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சாமித்தம்பி இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

வைத்தியசாலை மருத்துவ நிபுணர்கள்,மருத்துவர்கள், வைத்தியசாலை குழுவினர், ஏனைய ஊழியர்கள் எனப் பலரும் சேவை நலன் பாராட்டுகளை வழங்கினர்.

ஊழியர்களான பிரியன் மற்றும் அபியின் காணொளிகள் அருமையாக இருந்தன.பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பணிப்பாளர் சுகுணன் பொன்னாடைகள் போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இறுதியில் அவர் உணர்வுபூர்வமாக ஏற்புரை வழங்கினார்.

 சிரேஸ்ட வைத்திய அதிகாரி ந.ரமேஸ் நன்றியுரையாற்றினார்.

புகைப்படங்களை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்

https://www.facebook.com/share/p/18gp4uKbo3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *