November 18, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மிகவும் பின்தங்கிய சிறிவள்ளிபுரத்தில் பிஆர் பவுண்டேஷனின் போஷனதானம்

மிகவும் பின்தங்கிய சிறிவள்ளிபுரத்தில் பிஆர் பவுண்டேஷனின் போஷனதானம்

(  வி.ரி. சகாதேவராஜா)

அவுஸ்திரேலிய சிட்னி பிஆர்  பவுண்டேஷன்(PR. Foundation, Sydney , Australia) ஸ்தானத்தின் முதலாவது போஷன தானம்,  அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய ஸ்ரீ வள்ளிபுரம் வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இப் போஷனதானம் கடந்த (24) வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு வள்ளியம்மாள் ஆலயமான சிறிவள்ளிபுரம் வள்ளியம்மாள் ஆலய வளாகத்தில்  ஆரம்பிப்பதையொட்டி, விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. 

அவுஸ்திரேலிய பிஆர்  பவுண்டேஷன் ஸ்தானத்தின் இலங்கைக்கான இணைப்பாளர்  ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  தலைமையில் இத் தானம் வழங்கப்பட்டது.

நிகழ்வில்,   காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் பூரண உதவி ஒத்தாசை வழங்கினார்.

நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர், பெரியோர் வந்து பசியாறி நன்றிகூறிச் சென்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *