November 18, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > திருக்கோவிலில் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்களுக்குப் பரிசில் வழங்கும் நிகழ்வு!

திருக்கோவிலில் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்களுக்குப் பரிசில் வழங்கும் நிகழ்வு!

– ஜே.கே.யதுர்ஷன்

கலாசார அலுவல்கள் திணைக்களமும் திருக்கோவில் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நிரோஜினி தவநீதன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் ஆர். சுவாகர் கலந்து சிறப்பித்தார்.

மேலும், நிர்வாக உத்தியோகத்தர் வை.பி. லாபீர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் மனோகரன், திருக்கோவில் மக்கள் வங்கிக் கிளை முகாமையாளர் கஜேந்திரன், கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் கே. ரவீந்திரன் மற்றும் கலாசார அதிகார சபையின் தலைவர் எம். சிவகாமிதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச மட்டத்தில் மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் கலை, இலக்கிய ஆற்றல்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட தொகுப்பை பார்வையிட இந்த இணைப்பை சொடுக்கவும் https://www.facebook.com/share/p/1A5VdGoHui/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *