November 2, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > November

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மருத்துவர் சுகுணன் நியமனம்!

( வி.ரி. சகாதேவராஜா)மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார் . அதற்கான நியமனக் கடிதம் சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இன்று (2) திங்கள் கிழமை சுகாதார அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது .இவருடன் மேலும் றாகம ,களுபோவில, பேராதனை , லேடி றிஜ்வே ஆகிய போதனா வைத்தியசாலைகளின் புதிய பணிப்பாளர்களுக்கான நியமனமும் வழங்கப்பட்டது. அச் சமயம் சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கவும் கலந்து கொண்டார். சுகாதார […]

Read More

களுவாஞ்சிக்குடியில் வாழ்வாதார உதவிகள் வழங்கல்-பிரபு எம்.பி. பங்கேற்பு. 

( வி.ரி.சகாதேவராஜா)       பிரஜாசக்தி” தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலக பிரிவில் வாழ்வாதாரத் திட்டங்களுக்கென தெரிவுசெய்யப்பட்ட களுவாஞ்சிக்குடி பிரதேச பயனாளிகளுக்கான வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கும்  முதற்கட்ட நிகழ்வானது பிரதேச செயலாளர்  உ. உதயஶ்ரீதர்  தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு  வாழ்வாதார […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

அஸ்வெசும முதலாம் கட்ட புதுப்பித்தல் தெரிவு தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபையால் வெளியிட்டுள்ள முதலாம் கட்ட புதுப்பித்தல் தெரிவுப் பட்டியல் முழுமையாக கணனிமயப்படுத்தப்பட்ட முறைமையின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இத்தெரிவு முறையில் கிராம உத்தியோகத்தருக்கோ அல்லது பிரதேச செயலாளருக்கோ எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. மேலும், இதில் தெரிவு செய்யப்படாதவர்கள் மேல்முறையீடு செய்வதும் பொருத்தமற்ற ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள போது அது தொடர்பாக ஆட்சேபனை செய்வதும் குறித்த நிகழ்நிலை (Online) முறைமை ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை விடுத்து […]

Read More

நாளை கல்முனை  ஆதார வைத்தியசாலையில்,தேசிய உற்பத்தித்திறன் விருதிற்கான சாதனையாளர்  பாராட்டு விழா

(வி.ரி.சகாதேவராஜா) தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 இல் பொதுத்துறை பிரிவில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்த கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சாதனையை பாராட்டிக் கௌரவிக்கும் விழா,  வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் தலைமையில் நாளை (03) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. வைத்தியசாலையின் பணிப்பாளர், சகல ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக் குழு இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் […]

Read More

பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் முருகப்பெருமானின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை:

பெரிய நீலாவணை அருள்மிகு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானின் ஆலயத்தில், பாலமுருகன் சமேத வள்ளி தெய்வானை திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்  சிறப்பு வழிபாடுகள் 01/11/2016  நேற்று இடம்பெற்றது. ஆலயத் தலைவர் திரு. ச. குமுதன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலய பரிபாலன சபையினர், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, முருகப் பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை ஆகிய திருவுருவச் சிலைகளுக்கு ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் தலைமையில், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் இணைந்து பன்னீர் அபிஷேகத்தை மிகச் சிறப்பாகச் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளுக்கு விசேஷ கிரியைகளும், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. இதில்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

மருதமுனை மசூர் மௌலானா வீதி சீரமைப்பு- மாநகர ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு   பாராட்டு

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை மசூர் மௌலானா வீதியில் வடிகான்கள் மண்ணினால் நிரம்பிக் காணப்பட்டதன் காரணமாக, பெய்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையில், தகவல் கிடைத்த உடனடியாகக் களத்திற்கு வருகை தந்து உரிய நடவடிக்கை எடுத்த மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் பிரதேச மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். மசூர் மௌலானா வீதியின் வடிகான்கள் மண் அடைபட்டுப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையால், மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாய நிலை […]

Read More

வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயம் காலிறுதி போட்டிக்கு தெரிவு.

வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயம் காலிறுதி போட்டிக்கு தெரிவு. கே.எஸ்.கிலசன் சக்தி தொலைக்காட்சியின் “சொல்லால் வெல்வோம் வெல்லும் வரை சொல்வோம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்று வரும் விவாதச்சமரில் நாவிதன்வெளி வேப்பையடி கமு/சது கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் சிறப்பான வாதத்திறமையால் வெற்றி பெற்று செங்கோலை பெற்றுக்கொண்டு காலிறுதி சுற்றுக்கு தெரிவாகினர். படுவான்கரை மண்ணில் பல திறமையாளர்கள் சிறந்த தமிழ் உச்சரிப்பு, சொல்வளம், பேச்சாற்றலோடு இலைமறை காய்களாக ஒளிந்துள்ளார்கள் என்பதற்கு இவர்கள் சான்று. முதல் இரண்டு சுற்றுக்களிலும் சிறப்பான […]

Read More