அஸ்வெசும முதலாம் கட்ட புதுப்பித்தல் தெரிவு தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபையால் வெளியிட்டுள்ள முதலாம் கட்ட புதுப்பித்தல் தெரிவுப் பட்டியல் முழுமையாக கணனிமயப்படுத்தப்பட்ட முறைமையின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இத்தெரிவு முறையில் கிராம உத்தியோகத்தருக்கோ அல்லது பிரதேச செயலாளருக்கோ எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை.
மேலும், இதில் தெரிவு செய்யப்படாதவர்கள் மேல்முறையீடு செய்வதும் பொருத்தமற்ற ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள போது அது தொடர்பாக ஆட்சேபனை செய்வதும் குறித்த நிகழ்நிலை (Online) முறைமை ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை விடுத்து பிரதேச செயலகத்திற்கு வருவதன் மூலமோ அல்லது உத்தியோகத்தரிடம் முன்வைப்பதன் மூலமோ எந்தவித பயனுமில்லை; இது நேரவிரயத்தையும் வீண் அலைச்சலையுமே ஏற்படுத்தும்.
எனவே, பயனாளிகள் தங்களது மேல்முறையீடு மற்றும் முறைப்பாடுகளைக் குறித்த கணனித் தொகுதி ஊடாக மாத்திரம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
T.J. அதிசயராஜ்
பிரதேச செயலாளர்,
கல்முனை வடக்கு.