November 2, 2026

Blog Post

Kalmunai Net > Uncategorized > மருதமுனை மசூர் மௌலானா வீதி சீரமைப்பு- மாநகர ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு   பாராட்டு

மருதமுனை மசூர் மௌலானா வீதி சீரமைப்பு- மாநகர ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு   பாராட்டு

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை மசூர் மௌலானா வீதியில் வடிகான்கள் மண்ணினால் நிரம்பிக் காணப்பட்டதன் காரணமாக, பெய்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையில், தகவல் கிடைத்த உடனடியாகக் களத்திற்கு வருகை தந்து உரிய நடவடிக்கை எடுத்த மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் பிரதேச மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

மசூர் மௌலானா வீதியின் வடிகான்கள் மண் அடைபட்டுப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையால், மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாய நிலை உருவானது. இது குறித்து மாநகர நிர்வாகத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்தப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர்  மற்றும் நிர்வாகப் பிரிவினர்   உடனடியாகச் செயற்பட்டு, வடிகான்களில் தேங்கியிருந்த மண்களை அகற்றி, மழைநீர் எவ்விதத் தடையுமின்றிச் சீராகப்   செல்வதற்கான பாதையைச் சீரமைத்துக் கொடுத்தனர்.

 மழைக்காலத்தில் வீடுகளுக்குள் நீர் புகுந்து ஏற்படும் பாரிய அச்சுறுத்தலை உணர்ந்து, குறுகிய நேரத்தில் களத்திற்கு வந்து துரிதமாகச் செயற்பட்டுப் பிரச்சினையைத் தீர்த்து வைத்த மாநகர ஆணையாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் இந்தச் சேவையை மருதமுனை மசூர் மௌலானா வீதி வாழ் பொதுமக்கள் பெரிதும் பாராட்டியுள்ளதுடன், தங்களது இதயப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்மருதமுனை மசூர் மௌலானா வீதி சீரமைப்பு- மாநகர ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு   பாராட்டு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *