November 2, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் முருகப்பெருமானின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை:

பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் முருகப்பெருமானின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை:

பெரிய நீலாவணை அருள்மிகு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானின் ஆலயத்தில், பாலமுருகன் சமேத வள்ளி தெய்வானை திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்  சிறப்பு வழிபாடுகள் 01/11/2016  நேற்று இடம்பெற்றது.

ஆலயத் தலைவர் திரு. ச. குமுதன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலய பரிபாலன சபையினர், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, முருகப் பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை ஆகிய திருவுருவச் சிலைகளுக்கு ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் தலைமையில், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் இணைந்து பன்னீர் அபிஷேகத்தை மிகச் சிறப்பாகச் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளுக்கு விசேஷ கிரியைகளும், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. இதில்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *