November 2, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > களுவாஞ்சிக்குடியில் வாழ்வாதார உதவிகள் வழங்கல்-பிரபு எம்.பி. பங்கேற்பு. 

களுவாஞ்சிக்குடியில் வாழ்வாதார உதவிகள் வழங்கல்-பிரபு எம்.பி. பங்கேற்பு. 

( வி.ரி.சகாதேவராஜா)

      பிரஜாசக்தி” தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலக பிரிவில் வாழ்வாதாரத் திட்டங்களுக்கென தெரிவுசெய்யப்பட்ட களுவாஞ்சிக்குடி பிரதேச பயனாளிகளுக்கான வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கும்  முதற்கட்ட நிகழ்வானது பிரதேச செயலாளர்  உ. உதயஶ்ரீதர்  தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு  வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  செ. பிரபாகரன், கிராம அபிவிருத்தி  உத்தியோகத்தர் தெ. நவநாயகம், அலுவலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *