September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026

எதிர்வரும் மாதங்களில் உலகம் பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளலாம் – ஜெய்சங்கர் எச்சரிக்கை

எதிர்வரும் மாதங்களில் உலகம் பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார். தானிய ஏற்றுமதியில் ஏற்படக்கூடிய இடையூறுகள், உரத் தட்டுப்பாடு மற்றும் வலுவான எல் நினோ வானிலை தாக்கம் ஆகியவை உலகளாவிய உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கருங்கடல் பிராந்தியத்தின் ஊடான தானிய ஏற்றுமதியில் ஏற்படும் தடைகள் உலகளாவிய உணவு விநியோகத்திற்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், ரஷ்யா மற்றும் மத்திய […]

Read More

பெருந்திரளானோர் கண்ணீர்சிந்த டிலான்சன் (டிலு) விடை பெற்றான்!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவரான அருள்ஞானமூர்த்தி டிலான்சனின் (டிலு) இறுதி நல்லடக்கம் இன்று பெருமளவான இளைஞர்கள் பொதுமகக்ளின் கண்ணீரஞ்சலியுடன் நற்பிட்டிமுனை இந்து மயானத்தில் இடம் பெற்றது இளைஞர் சேனையின் கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது நேற்று சுகயீனம் காரணமாக இறையடிசேர்ந்த டிலான்சன் கல்முனையில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட சமூகப்பற்றாளராக செயற்பட்டவர். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் அருள்ஞானமூர்த்தி ஓய்வுபெற்ற அதிபர் ஜெனைதாஆசிரியர் ஆகியோரின் மூத்த புதல்வரும் சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி தலைவருமான […]

Read More

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), சர்வதேச விஞ்ஞான ஆக்கப்போட்டியில் சாதனை

-சிவகுமார்- மட்டக்களப்பு – பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), சர்வதேச அளவில் நடைபெற்ற விஞ்ஞான ஆக்கப்போட்டியில் சிறப்பான சாதனையைப் பதிவு செய்து மட்டக்களப்பு மண்ணுக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளது. சீனாவின் நனிங் பிரதேசத்தில் சர்வதேச ரீதியில் நடைபெற்ற விஞ்ஞான ஆக்கப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்போட்டிக்கான இலங்கை அணிக்கு தலைமை தாங்கிச் சென்ற பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் இரசாயனவியல் ஆசிரியர் எஸ். தேவகுமார் அவர்களின் வழிகாட்டுதலும் […]

Read More

சம்மாந்துறை – நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு: ஒளிர்ந்தது உடங்கா தோட்டத்து வீதி

தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட உடங்கா 01 மற்றும் உடங்கா 02 பகுதிகளில் பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, தேவையான இடங்களில் புதிய தெருமின்விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகானின் கோரிக்கைக்கு அமைவாகவும், பிரதேச சபை தவிசாளரின் அனுமதியுடனும் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பௌஸ்மாவத்தை பிரதான வீதியிலிருந்து பிரிந்து செல்லும் இரண்டாவது குறுக்கு வீதியான தோட்டத்து வீதியில் புதிய தெருமின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. […]

Read More

பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கைகள்; அமைச்சரிடம் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு வலியுறுத்தல்

(செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் வலியுறுத்தியுள்ளது. அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்புக்கும் அமைச்சருக்கும் இடையிலான இச்சந்திப்பு நேற்று (28) பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் […]

Read More

​வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் Boys அமைப்பின் “திறமைக்கு மகுடம்” நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது!

​வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் Boys அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட “திறமைக்கு மகுடம்” சிறப்பு நிகழ்வு 28.09.2026 நேற்று மிகவும் கோலாகலமாக பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. ​இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். ​மேலும், சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் அதிபர் திரு. தர்சநாத், முன்னாள் அதிபர்களான திரு. கோணேசமூர்த்தி, திரு. கமலநாதன், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் திரு. ஜெயச்சந்திரன், நிந்தவூர் இலங்கை வங்கியின் முகாமையாளர் திரு. ரஜனிக்காந் […]

Read More

உலக சுற்றுலா தினத்தில் உல்லையில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி படுகாயம்.!

( வி.ரி. சகாதேவராஜா)  உலக சுற்றுலா தின காலத்தில், பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அறுகம்பை உல்லை சின்ன உல்லைப்  பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த சுற்றுலாப் பயணி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகப் பொத்துவில் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அண்மைக்காலமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அறுகம்பை உல்லாசபுரியில் அதிகமாகி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை அப்பகுதி மக்களுக்கும் […]

Read More

கல்முனையின் சமூகப் பணியாளர் அ. டிலான்ஷன் – மு. ராஜேஸ்வரன் , சந்திரசேகரம் ராஜன் இரங்கல் செய்தி

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு. ராஜேஸ்வரன் அனுதாபம் கல்முனையின் சமூகப் பணியாளர் அ. டிலான்ஷன் காலமானார் – மு. ராஜேஸ்வரன் அனுதாபம்கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவரும், இனப்பற்றும் சமூக அக்கறையும் கொண்டவருமான அ. டிலான்ஷன் காலமானார். அவரது மறைவு கல்முனை மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்முனையில் எங்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், அந்த இடத்துக்கு விரைந்து சென்று, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து மக்களுடன் துணைநின்றவர் டிலான்ஷன் என முன்னாள் கிழக்கு மாகாண […]

Read More

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர் அ.டிலான்சன் (டிலு) காலமானார்!

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர் அருள்ஞானமூர்த்தி டிலான்சன் (டிலு) சுகயீனம் காரணமாக இன்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்

Read More

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையால் மாணவிக்கு மடிக்கணினி வழங்கி வைப்பு

கல்வி முன்னேற்றத்திற்கான பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வரும் கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால், பாண்டிருப்பைச் சேர்ந்த தந்தையை இழந்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு அவரது கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் மடிக்கணினி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 26.09.2026 அன்று இடம்பெற்ற இந்நிகழ்வில், தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மாணவிக்கு மடிக்கணினியை வழங்கி வைத்தனர். மாணவியின் கல்வித் தேவையை கருத்திற்கொண்டு இந்த உதவியை வழங்குவதற்கு நிதிப் பங்களிப்பை மேற்கொண்ட அறக்கட்டளையின் உறுப்பினர் திரு. குலதீபன் […]

Read More