November 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட விஜயம்!

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட விஜயம்!

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட விஜயம்!

– ஜே.கே.யதுர்ஷன்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது வலயக் கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார் தலைமையிலான கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களால் பிரதமர் வரவேற்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திருக்கோவில் விஸ்வதுளசி வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியைப் பிரதமர் திறந்து வைத்ததுடன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனும் கலந்துரையாடினார்.

தொடர்ந்து திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பிலும் பிரதமர் கலந்துகொண்டார். இதன்போது வலயக் கல்விப் பணிப்பாளரினால் பிரதமருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக, தற்போது தற்காலிக இடத்தில் இயங்கி வரும் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்கான முதற்கட்டமாக 90 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் தனது உரையில் தெரிவித்தார். இது திருக்கோவில் கல்வி வலயத்தின் நீண்டகாலத் தேவையை நிறைவேற்றுவதற்கான முக்கிய அறிவிப்பாக அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, திருமதி ஏ.எம்.எம்.எம். ரத்வத்த, அம்பாறை மாவட்டச் செயலாளர் மங்கள அனுபமா விக்ரமாராச்சி, திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிதரன், திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன், பொத்துவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *