( வி.ரி.சகாதேவராஜா)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் (13) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக இந்துமாமன்றத் தலைவர் கோ.பிரகீத் தலைமையிலான மன்றத்தினர் இக் கைங்கரியத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இந்து மாமன்றத்தின் தலைவர் – கோ. பிரகீத்
செயலாளர் – சு. நிலோக்சன்
பொருளாளர் – மு. சுதர்சன்,
இந்து மாமன்ற பெரும் பொருளாளர் – சிரேஷ்ட விரிவுரையாளர் – ந. சுபராஜ்
இந்து மாமன்ற பெரும் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் – செல்வக்குமாரி உள்ளிட்ட குழுவினர் கடந்த 12 வருடங்களுக்கு பிறகு இப் புனராவர்த்தன கும்பாபிஷேகத்தை நிறைவேற்றியுள்ளார்கள்.
முன்னதாக வியாழனன்று எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை, இந்துமாமன்றத்தினர் அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வர்ணப் பூச்சு பணிகளை மேற்கொண்டு உதவியாக செய்து கொடுத்துள்ளமை முன்மாதிரியானது என்பது குறிப்பிடத்தக்கது.











