(அஸ்லம் எஸ்.மௌலானா)
அக்கரைப்பற்று மற்றும் கல்முனை மாநகர சபைகளின் ஆணையாளரான என்.எம். நௌபீஸ் அவர்கள், ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை கென்யாவுக்குப் பயணமாகிறார்.
கென்யாவில் நடைபெறவுள்ள நீர்வளப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் இவ்விஜயத்தை மேற்கொள்கிறார்.
வறட்சி, கடும் மழை உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும், அவற்றைத் திறம்பட முகாமைத்துவம் செய்வதற்கும் மாநகராட்சிகளின் ஆற்றலை வலுப்படுத்துவது தொடர்பில் இம்மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த மே மாதம் ஜேர்மனியில் இரண்டு வாரகாலமாக நடைபெற்ற ஆய்வு மாநாட்டிலும் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் பங்கேற்றிருந்தார்.
மேலும், கடந்த காலங்களில் ஜப்பான், சீனா, இந்தியா, பாகிஸ்தான், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Aslam S.Moulana
Journalist
