வீதியில் பூப்பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிலில் வந்த திருடன் ஒருவன் அறுத்துச்சென்ற சம்பவம் இன்று 16.11.2026 அதிகாலை சேனைக்குடியிருப்பு பலாவடி வீதியில் நடந்துள்ளது.
பூப்பறித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிலை நிறுத்திவிட்டு வந்து அடுத்த வீதியில் உள்ள நபர் ஒருவரின் வீட்டை விசாரிப்பதுபோன்று கேட்டுவிட்டு கழுத்தில் அணிந்திருந்நத தங்க மாலையை இழுத்து அறுத்துச்சென்றதாகவும் குறித்த திருடன் தடுமாற்றத்தில் தனது தொலைபேசியை அந்த இடத்தில் விட்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்நத குறித்த பெண் சிகிச்சைபெற்றுவருகிறார்.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத்தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்