பவதாகர்
*இருவர் இணைந்து ஒரு நூல் ஏழுதி வெளியிடும் கிழக்கிலங்கையில் இது முதல் நூல்*
ஃபிர்தெளஸ் – ருத்ரா ஆகியோர் இணைந்து எழுதிய ‘ஒழுங்கமைக்கப்பட்ட சிறைக்கூடம்’ எனும் கல்வியியல் இலக்கிய நூலின் வெளியீட்டு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மருதமுனை சுபைர் இப்ராஹிம் மண்டபத்தில் (அல்மனார் மத்திய கல்லூரி மண்டபம்) சிறப்பாக நடைபெற்றது
எழுத்தாளரும் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஜே. டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹீதுல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்
மேலும், எழுத்தாளர் டாக்டர் புஷ்பலதா லோகநாதன், அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதி சத்தார் எம். சதாத், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப். ஹிபத்துல் ஹரீம், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதிப் பதிவாளர் சஞ்சீவி சிவகுமார், மௌலவியும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான இஸட். எம். நதிர், உயிரியல் பிரயோக விஞ்ஞான பீடத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எம். ரியாஸ் அஹமத், ஓய்வுநிலை அதிபர் கே. சந்திரலிங்கம் மற்றும் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. பீர் முஹம்மத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
இந்நூலுக்கான மதிப்புரையை மனிதவள ஆலோசகரும் உளவியல் ஆய்வாளருமான ரக்ஷானா சர்புதீன் வழங்கினார்
நூலின் முதல் பிரதியை முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம். ஜெமில் பெற்றுக்கொண்டார்
இந்நிகழ்வினை கவிஞர் வி. ஜிலி தொகுத்து வழங்கினார்
https://www.facebook.com/share/p/18oB483GTw புகைப்படங்களை பார்வையிட இந்த இணைப்பை சொடுக்கவும்