பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று (16) முருகப்பெருமானுக்கான திருக்கல்யாண வைபவம் பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவஸ்ரீ வசந்த டிமலேஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியைகள் மற்றும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்பெற்றனர்.
பக்தி நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்நிகழ்வு கந்தசஷ்டி விரதத்தின் நிறைவாக அமைந்தது.