கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் வட்டார எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்காக புதிய தேசிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் குறித்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262ஆம் அத்தியாயம்) 3அ (1) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, 2026 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தேசிய குழுவின் உறுப்பினர்கள் வருமாறு:
- தலைவர் – எம்.கே.எஸ்.எச். ரத்நாயக்க
- கே. தவலிங்கம் – உறுப்பினர்
- எம்.எம். மொஹமட் – உறுப்பினர்
- கே.எம்.எல். கருணாரத்ன – உறுப்பினர்
- ஒ.டி.எம்.ஐ. திலகரத்ன – உறுப்பினர்
குறித்த தேசிய குழுவானது கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் வட்டார எல்லைகளை மீளாய்வு செய்து, அவற்றை மீள்நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
இந்நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
