November 18, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இலங்கை அரசாங்கம் மட்.இகிமிசனின் நூற்றாண்டு விழாவை கௌரவித்து  ஞாபகார்த்த முத்திரை  வெளியீடு!

இலங்கை அரசாங்கம் மட்.இகிமிசனின் நூற்றாண்டு விழாவை கௌரவித்து  ஞாபகார்த்த முத்திரை  வெளியீடு!

( வி.ரி. சகாதேவராஜா)

 இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு கிளையின் நூற்றாண்டு நிறைவையொட்டி, ட ரன் அரசாங்கம் ஐம்பது ரூபாய் பெறுமதியான ஞாபகார்த்த முத்திரையை வெளியிட்டு கௌரவப் படுத்தியுள்ளது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வு நேற்று முன்தினம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 

கல்லடி விபுலானந்தா ஞாபகார்த்த மணி மண்டபத்தில்  நடைபெற்றபோது இலங்கை தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வமாக முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை சீல் செய்து சுவாமிகளுக்கு வழங்கி வைத்தனர்.

 உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் இலங்கைக்கான இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ  மகராஜ்   கோணம்பட்டி இராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ,  மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் ஆகியோருக்கு மேடையில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கி வெளியிட்டு வைத்தனர். பின்னர் ஏனைய பிரமுகர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *