November 18, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பாடசாலைகளில் மத்தியஸ்த சபைகள்;கல்முனையில் பற்றிமா தெரிவு

பாடசாலைகளில் மத்தியஸ்த சபைகள்;கல்முனையில் பற்றிமா தெரிவு

( வி.ரி.சகாதேவராஜா)

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் (Ministry of Justice & National Integration) கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால், நாடளாவிய ரீதியில் பாடசாலை மத்தியஸ்த சபைகளை அமைக்கின்ற வேலைத்திட்டத்தில், இம்முறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில்  கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டிருந்தது.

 அந்தவகையில் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 மாணவர்களுக்கு 3 நாள் விசேட பயிற்சி  வழங்கப்பட்டது. 

அவ்  விசேட பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (17) செவ்வாய்க்கிழமை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையில் அதிபர் வண.பிதா.லெபோன் சுதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ்  கலந்து சிறப்பித்தார்.

அவருடன் செயலக உத்தியோகத்தர் எஸ்.அருள்சாந்த் கலந்து சிறப்பித்தார்

.

மேலும், இலங்கை நிர்வாக சேவையின் தரம் ஒன்றிற்கு பதவி உயர்வு பெற்றமைக்காக, பாடசாலைச் சமூகத்தினரால்   திரு.அதிசயராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை சூட்டி கௌரவம்வழங்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *