( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு 3, சித்தானைக்குட்டி புரம் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கடந்த மூன்றுநாட்களாக காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க நடேசன் ( தம்பி என அழைக்கப்படுபவர்) எனும் குடும்பஸ்தரே இவ் விதம் மர்மமாக காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவரை பொதுமக்கள் எங்காவது கண்டால், உடனடியாக 0771800603 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இறுதியாக கல்முனை ஆதார வைத்தியசாலை அருகே நின்றவர் எனக் கூறப்படுகிறது.
இவரைக் கண்டவர்கள் தயவு செய்து உடனடியாக அறியத்தருமாறும், இச்செய்தியை அதிகம் பகிர்ந்து உதவுமாறும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.