செல்லையா பேரின்பராசா
கலாசார அலுவல்கள் திணைக்களமும் , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா நேற்று திங்கள் கிழமை ( 2026.11.16 ) காலை 10.00 மணியளவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் வெகு சிறப்பாகஇடம்பெற்றது.
இந் நிகழ்வில் இப் பிரதேச செயலக கணக்காளர் வ.நாகேஸ்வரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன் நிர்வாக உத்தியோகத்தர் க.கருணாநிதி கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் மு.கங்காகரன் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி விஜயகுமார் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்ர் திருமதி ஜயந்தா அரங்கன் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி வ.பற்பராசா சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.புவிதரன் விஞ்ஞான கள உத்தியோகத்தர் வ.பிரசாத் ,மண்முனை தென் எருவில் பற்று கலாசார அதிகார சபையின் செயலாளரும் ஓய்வு நிலை அதிபருருமான செல்லையா பேரின்பராசா உள்ளிட்டோர் பிரதேசஇலக்கிய விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தனர்.
இவ் விழாவில் பல கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
புகைப்படத் தொகுப்பை பார்வையிட இந்த இணைப்பை சொடுக்கவும்

