34 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க கல்விச் சேவையிலிருந்து ஆசிரியை திருமதி சுபோஜினி சாந்தகுமார் அவர்கள் இன்று (17.11.2026) ஓய்வுபெறுகின்றார்.
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவியான இவர், முன்பள்ளி முதல் உயர்தரம் வரை தனது கல்வியை அதே பாடசாலையில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், 1992ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக அதே பாடசாலையில் நியமனம் பெற்றார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கு தமிழ், இந்து நாகரிகம், தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களைக் கற்பித்து, மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.
தனது 34 ஆண்டுகால ஆசிரியர் சேவையில், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் சுமார் 28 ஆண்டுகளும், கல்முனை ஆர்.கே.எம். பாடசாலையில் மூன்று ஆண்டுகளும், வீரமுனை ஆர்.கே.எம். பாடசாலையில் இரண்டு ஆண்டுகளும் கல்விப் பணியாற்றியுள்ளார்.
இவர் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் கா. சாந்தகுமார் அவர்களின் துணைவியாவார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், ஒழுக்க மேம்பாட்டிற்காகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த திருமதி சுபோஜினி சாந்தகுமார் அவர்களின் கல்விச் சேவை என்றும் நினைவுகூரப்படும்.
அவரது ஓய்வுக்காலம் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், மனநிறைவும் நிறைந்ததாக அமைய கல்முனைநெட் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


