November 13, 2026

Blog Post

Kalmunai Net > Uncategorized > தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பில் உயர்தர மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பில் உயர்தர மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு.

(செல்வி வினாயகமூர்த்தி)

தேசிய வாசிப்பு மாதம் – 2026 நிகழ்ச்சித் திட்டத்தை முன்னிட்டு, “வாழ்நாள் முழுதும் எழுத்தே நண்பன்” எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசபையின் கீழ் இயங்கும் ஆலையடிவேம்பு பொது நூலகத்தின் ஏற்பாட்டில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கு இன்று (12) வியாழக்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேசசபைத் தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில், பிரதேசசபைச் செயலாளர் எஸ். திவாகரனின் வழிநடத்தலில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும் உயர்தர மாணவர்கள் 153 பேர் கலந்துகொண்டனர்.
கமு/திகோ கண்ணகி வித்தியாலயம், கமு/திகோ கோளாவில் விநாயகர் வித்தியாலயம், கமு/திகோ அக்கரைப்பற்று இராமகிருஷ்ண தேசியப் பாடசாலை மற்றும் கமு/திகோ அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கின் வளவாளராக ESOFT Metro Campus முகாமையாளர் திருமதி எல். சரண்யா கலந்துகொண்டு, மாணவர்களுக்கு கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் குறித்து விளக்கமளித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதுடன், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவையும் விரிவுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சனசமூக உத்தியோகத்தர் (CDO) திருமதி ரேணுகா வரகுணநாதன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரேஷ் ஸ்ரிபன்ஷன், முன்னாள் ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் வா. குணாளன், நூலகர் ஏ.எல். ஹம்துனா, பிரதேசசபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *