கலவரத்தைத் தூண்டும் வகையில் சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.