November 17, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாவிதன்வெளி விளாவடி பிள்ளையார் அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு!

நாவிதன்வெளி விளாவடி பிள்ளையார் அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு!

சௌவியதாசன்

நாவிதன்வெளி விளாவடி பிள்ளையார் அறநெறிப் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தேவையான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அறநெறிப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நேற்று (13) இந்தத் தளபாடங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனனின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த திணைக்கள மற்றும் பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்துவதுடன், அவர்களின் ஆன்மீக மற்றும் ஒழுக்கக் கல்வியை வளர்ப்பதற்கும் இத்தகைய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி, பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர்களான க. நீலேந்திரன், பா. சறோஜினி, விளாவடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாட்டுக்கு ஆலய நிர்வாகத்தினரும் கிராம மக்களும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *