November 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஏற்பாட்டில் அறநெறி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை சிறப்பாக இடம்பெற்றது

திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஏற்பாட்டில் அறநெறி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை சிறப்பாக இடம்பெற்றது

| ஜே.கே.யதுர்ஷன் |

அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஏற்பாட்டில், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறை இன்று (14.11.2026) சனிக்கிழமை திருக்கோவில் விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலக் கட்டடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு. சசிகுமார் கலந்து சிறப்பித்தார்.

மேலும், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி, திருக்கோவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிஷாந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பமாக விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதம குரு ஆறுமுக கிருபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

குருகுலத்தின் பணிப்பாளர் கன. இராசரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ. ரவீந்திரன் மற்றும் பஜனைக் குழுத் தலைவர் சிவ. சிவபெருமான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு. சசிகுமார், அறநெறி ஆசிரியர்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள், தெளிவூட்டல்கள் மற்றும் பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து திரூக்கோவில் பிரதேச சபை கௌரவ தவிசாளர் குறித்த நிகழ்வில் ஏற்பாட்டு குழு மற்றும் ஆசிரியர்களால் மலர் மாலைகள் அனுவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். .

அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தையும், ஆசிரியர்களின் சமூகப் பொறுப்பையும் வலியுறுத்தும் வகையில் இப்பயிற்சிப் பட்டறை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது….

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *